உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மனித -- விலங்கு மோதல் வேண்டாம்: கலை நிகழ்ச்சியில் விழிப்புணர்வு

மனித -- விலங்கு மோதல் வேண்டாம்: கலை நிகழ்ச்சியில் விழிப்புணர்வு

கோத்தகிரி: கோத்தகிரி கக்கல்தொரை பஜாரில், மனித- விலங்கு மோதல் குறித்து, கலை நிகழ்ச்சியில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில், சமீப காலமாக மனித- விலங்கு மோதல் அதிகரித்து, பலர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு, வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில், மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவு பேரில், காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம் சார்பில், நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கட்டபெட்டு வனச்சரகர் செல்வகுமார் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில், 'காடுகள் வளர்ப்பதன் முக்கியத்துவம், பல்லுயிர் சூழல் உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் மனித- விலங்கு மோதலை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்,' குறித்து வீதி நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பல பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை