மேலும் செய்திகள்
மயங்கி விழுந்து பெண் சாவு
30-Sep-2025
கோத்தகிரி, ; கோத்தகிரி குஞ்சப்பனை பகுதியில் அமைந்துள்ள கிளன்பர்ன் தனியார் தேயிலை எஸ்டேட்டில், சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டம், ஓம்நகர் பகுதியை சேர்ந்த, ஜெகதீஷ்குரே, அவரது மனைவி சிமாதேவி ஆகியோர், மூன்று குழந்தைகளுடன் குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்தனர். சிமாதேவியை, தனது சகோதரர் சசிபால் என்பவரை ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, எஸ்டேட்டில் பணியில் சேர்த்துள்ளார். சிமாதேவியின் கணவர் ஜெகதீஷ் குரேவுக்கு குடிபழக்கம் உள்ளது. மனைவி அடிக்கடி மொபைல் போனில் நேரம் செலவிடுவதால், தம்பதியருக்கு இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவ்வப்போது, சசிபால் சமாதனம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த, 28ம் தேதி சிமாதேவி காணாமல்போனதால் குடும்பத்தினர் தேடியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அங்குள்ள தேயிலை தொழிற்சாலை அருகே, காயங்களுடன் சிமாதேவி இறந்து கிடந்துள்ளார். இது குறித்து, சிமா தேவியின் சகோதரர் சசிபால் கொடுத்த புகாரின்படி, கோத்தகிரி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், 'மொபைல் போன் பிரச்னை தொடர்பாக, சிமா தேவியை மதுபோதையில் கண்டித்த, கணவர் ஜெகதீஷ் குரே, சம்பவத்தன்று, துப்பட்டாவை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன்பின், அருகில் உள்ள எஸ்டேட் தொழிற்சாலை பகுதியில் விசினார்,' என, உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, ஜெகதீஷ் குரேவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
30-Sep-2025