உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வயநாடு நிலச்சரிவில் உயிர்களை காப்பாற்றிய செவிலியர்கள் கவுரவிப்பு

வயநாடு நிலச்சரிவில் உயிர்களை காப்பாற்றிய செவிலியர்கள் கவுரவிப்பு

பந்தலுார்; கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கிய பல உயிர்களை காப்பாற்றிய செவிலியர்களுக்கு கவுரவம் அளிக்கப்பட்டது.கேரளா மாநிலம் வயநாடு சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளில் கடந்த ஜூலை, 30ல், ஏற்பட்ட நிலச்சரிவில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அன்று காலை மீட்பு பணிக்காக, பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில் இருந்து தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் உடனடியாக சென்றனர். அதில், பந்தலுார் பகுதியில் செயல்படும், 'ஷிகாப் தங்கள்' சேவை மையத்தில் பணியாற்றும், செவிலியர்கள் பிந்து மற்றும் சிந்தியா, ஆம்புலன்ஸ் டிரைவர் பாபு ஆகியோர், 100க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களை, காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். அதில், உயிரிழந்ததாக கூறி ஆம்புலன்சில் ஏற்றிய மூதாட்டி ஒருவரை இந்த குழுவினர் உடனடி சிகிச்சை அளித்து காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து தற்போதும் அவர் உயிருடன் இருக்க மருத்துவ சேவையாற்றினர்.இவர்களை பாராட்டி கவுரவிக்கும் வகையில், திருப்பூர் பகுதியில் செயல்படும் குர்பானி அறக்கட்டளை சார்பில் அனைவருக்கும் பணமுடிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன், அறக்கட்டளை நிர்வாகி ஜபருல்லா மற்றும்நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ