உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலை பிரச்னைக்கு உடனடி தீர்வு கண்ட அதிகாரிகள்

சாலை பிரச்னைக்கு உடனடி தீர்வு கண்ட அதிகாரிகள்

பந்தலுார்;பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பந்தபிலா பகுதியில், கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன்னர் நிதி ஒதுக்கீடு செய்து, துவக்கப்பட்ட சாலை சீரமைப்பு பணி நிறுத்தப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.அதிகாரிகள் தீர்வு காணாத நிலையில், 'தேர்தலின் போது அதிகாரிகள், அரசியல்வாதிகள் தங்கள் ஊருக்குள் ஓட்டு கேட்டு வரக்கூடாது; குடிநீர் பற்றாக்குறையை சரிப்படுத்த வேண்டும்; டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை முறையாக மேற்கொள்ள வேண்டும்; கிராமங்களில் நடைபாதைகள், தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்,' என, கருப்பு கொடி கட்டி, பேனர் வைத்து போராட்டம் நடத்தினர்.தொடர்ந்து, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், குமார், மண்டல வட்டார வளர்ச்சி சுரேஷ்குமார், வி.ஏ.ஓ., க்கள் அசோக்குமார், கர்ணன், ஊராட்சி செயலாளர் சஜீத் உள்ளிட்ட அதிகாரிகள், வார்டு உறுப்பினர் சுப்ரமணியம் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, சாலை சீரமைப்பு பணி உடனடியாக துவக்கப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், 'குடிநீர் கிணற்றை ஆழப்படுத்தி குடிநீர் முறையாக வழங்கப்படும்; மற்ற குறைகள் தேர்தல் முடிந்ததும் முன்னுரிமை கொடுத்து மேற்கொள்ளப்படும்,' என்றனர். அதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை