உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  இடிந்து விழுந்த பழைய கட்டடம்; தப்பிய கால்நடைகள்

 இடிந்து விழுந்த பழைய கட்டடம்; தப்பிய கால்நடைகள்

குன்னுார்: குன்னுாரில் ஆடு மாடு வதை கூடத்தின் அருகே உள்ள பழைய கட்டடம் இடிந்து விழுந்தது. குன்னுார் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் நகராட்சியின் ஆடு மாடுவதை கூடம் உள்ளது. இதன் அருகில் மிகவும் பழமை வாய்ந்த கட்டடம் உள்ளது. தொழுவமாக செயல்படும் இதில் மாடுகள் கட்டி வைக்கப்படுகிறது. நேற்று காலை கட்டடத்தின் பக்கவாட்டு ஒரு அறை திடீரென இடிந்து விழுந்தது. அந்த பகுதியில் யாரும் இல்லாத நிலையில், அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. கால்நடைகள் தாழ்வான பகுதியில் கட்டி வைக்கப்பட்டு இருந்ததால் பாதிப்பு ஏற்படவில்லை. மழை காலத்தில் கட்டடத்தின் மற்ற பகுதி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ