உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வளைவான சாலையில் - விபத்து ஏற்படும் அபாயம்

வளைவான சாலையில் - விபத்து ஏற்படும் அபாயம்

பந்தலுார்; பந்தலுார் அருகே சேரம்பாடி சாலையில் வளைவான பகுதியில் கட்டுமான பணிக்காக கட்டப்பட்டுள்ள துணியால், வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பந்தலுாரில் இருந்து கோழிக்கோடு மற்றும் வயநாடு செல்லும் சாலையில், சேரம்பாடி போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகே தனியார் ஒருவர் பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் முழுமை அடையும் முன்னரே எரிபொருள் வினியோகம் துவக்கப்பட்டு உள்ளது இங்கு நடக்கும் கட்டுமான பணிகளை, வெளி நபர்கள் அறிந்து கொள்ளாத வகையில், கருப்பு துணி கொண்டு வளைவான பகுதியில் மறைக்கப்பட்டு உள்ளது. இரு மாநில நெடுஞ்சாலையில் போலீஸ் நிலையம் அருகே, வளைவான சாலை பகுதியில், வேகமாக வரும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களை பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி மேகமூட்டம் சூழ்ந்து கொள்வதால், வெளியூர் வாகனங்கள் சாலை நிலை குறித்து தெரியாமல் வரும்போது விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. டிரைவர்கள் கூறுகையில், 'இப்பகுதியில் விபத்து ஏற்படும் முன்பு, ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை