ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
ஊட்டி : அரசு தாவரவியல் பூங்கா சுற்றுலா பயணியரின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியர் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மலர்களை ரசிக்க வந்து செல்வது வழக்கம். நடப்பாண்டு பொங்கல் திருவிழாவை ஒட்டி கடந்த, 14ம் தேதி முதல், 19ம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பொதுவாக தொடர் விடுமுறையின் போது கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து, சுற்றுலா பயணியர் அதிகளவில் தாவரவியல் பூங்காவுக்கு வந்து செல்வது வழக்கம்.நடப்பாண்டு பொங்கல் விழா ஒரு வாரம் அறிவிக்கப்பட்டும். தினமும் சராசரியாக, 10 ஆயிரம் சுற்றுலா பயணியர் மட்டும் வருகை தந்துள்ளனர். கடந்தாண்டின் பொங்கல் விடுமுறையின் போது சராசரியாக, 20 ஆயிரம் சுற்றுலா பயணியர் வந்து சென்றனர். கடந்த இரண்டு நாட்களாக ஊட்டியில், சாரல் மழை பெய்து குளிர் நிலவியது. இதனால், சுற்றுலா பயணியர் வருகை வெகுவாக குறைந்து அரசு தாவரவியல் பூங்கா உட்பட பிற சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டது.