உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி சாலையோர பூங்கா பராமரிப்பு இல்லை

ஊட்டி சாலையோர பூங்கா பராமரிப்பு இல்லை

ஊட்டி:ஊட்டி ஏ.டி.சி., எட்டிஸ் சாலையோரம் உள்ள பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல், புதர் மண்டி காணப்படுகிறது.ஊட்டி நகராட்சி நிர்வாகம் பராமரிப்பில், இந்த சாலையோர பூங்கா, கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்ட நிலையில், சமீப காலமாக, பிரம்ம குமாரிகள் அமைப்பினர் பராமரித்து வந்தனர். கொரோனா காலத்திற்கு பின் பூங்கா, போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பூங்காவினுள் இருந்த வண்ண மலர்கள் தெரியாத அளவுக்கு, அங்குள்ள மரங்கள் வளர்ந்தும், புதர் சூழ்ந்தும் காணப்படுகிறது.சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அதிகளவில் வந்துச்செல்லும் முக்கியமான பகுதியில்இந்த பூங்கா அமைந்துள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம், கோடை சீசனுக்குள் பூங்காவை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்