உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி; குன்னுாரில் தேச ஒற்றுமை பேரணி

ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி; குன்னுாரில் தேச ஒற்றுமை பேரணி

குன்னுார்; 'ஆப்பரேஷன் சிந்துார், வெற்றி மற்றும் பாரத தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, குன்னுாரில் தேசிய கொடி ஏந்தி, தேச ஒற்றுமை பேரணி நடந்தது.காஷ்மீர், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆப்பரேஷன் சிந்துார் வெற்றிகரமாக நடத்தியதை தொடர்ந்து குன்னுாரில் தேசபக்தர்களின், தேச ஒற்றுமை பேரணி நடந்தது.அரசு மருத்துவமனை சாலையில் துவங்கிய பேரணி மவுண்ட் ரோடு வழியாக சென்றது. பேரணியில், பாரத மாதா மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் வேடமணிந்த குழந்தைகள் தேசிய கொடி ஏந்தி வந்தனர். தேசப்பற்றை வெளிப்படுத்தும் பாரத் மாதா கோஷம் எழுப்பினர். 'விபி' திடலில் நடந்த கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் சவுந்திர பாண்டியன், சாந்தி ராமு, பா.ஜ., மாவட்ட தலைவர் தருமன், பொது செயலாளர் ஈஸ்வரன், இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் கார்த்திக், அனைத்து வணிகர் நல சங்க தலைவர் சேது உட்பட பலர் பேசினர்.'பாரதத்தில், முப்படை வீரர்கள் பிரதமர் மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, ஜாதி மத பேதம் இன்றி ஒற்றுமையை நம்பிக்கையும் வெளிப்படுத்த அனைவரும் ஒன்றிணை வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் பாப்பண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை