உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊர் மலைப்பகுதியில் மதுக்கடை வைக்க எதிர்ப்பு

ஊர் மலைப்பகுதியில் மதுக்கடை வைக்க எதிர்ப்பு

ஊட்டி; ஊர் மலைப்பகுதியில் டாஸ்மாக் மது கடை வைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஊட்டி அருகே, 'ஊர் மலை' கிராமத்தை சேர்ந்த கணேசன் தலைமையில் கலெக்டரிடம் அளித்துள்ள மனு: ஊட்டி அருகே ஊர் மலை கிராமத்தை சுற்றி நெல்லி மந்து, உலுப்பட்டி, ஒசஹட்டி, தொரைஹட்டி, கீழ் தொரை ஹட்டி, கரக்கல் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இப்பகுதி மக்கள் மலை காய்கறி, தேயிலை விவசாயம் அன்றாட தொழிலாக மேற்கொண்டு வருகின்றன. ஊர் மலை பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை வைக்க சம்மந்தப்பட்ட துறையினர் ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளனர். இப்பகுதியில் மக்கள் அன்றாட கூலி வேலை செய்து வருகின்றனர். இப்பகுதிக்கு டாஸ்மாக் மதுக்கடை வந்தால் கிராம மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. ஆரம்பத்திலிருந்து சுற்றுவட்டார பகுதிக்கு டாஸ்மாக் மதுகடை வைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சென்றது கிராம மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே , எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் மதுக்கடை வைக்க நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தடுக்க வேண்டும். இவ்வாறு , மனுவில் கூறப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ