மேலும் செய்திகள்
மஞ்சள் நிறத்தில் சாதம்; கலெக்டர் அதிர்ச்சி
09-Dec-2024
குன்னுார்; குன்னுார் ஐ.டி.ஐ., மாணவர்கள் விடுதியில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தர மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.குன்னுாரில், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வண்டிச்சோலை நகராட்சி நடுநிலை பள்ளியில், காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் உணவு தரம் பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.குன்னுார் அரசு தொழிற்பயிற்சி நிலைய தொழில்நுட்ப மையத்தில், 'டாடா டெக்னாலஜியின் ரோபோடிக்ஸ் 4.0' வகுப்புகளை பார்வையிட்டார். அதில், விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு படுக்கை வசதிகள் இல்லாதது குறித்து தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க, குன்னுார் கூடுதல் கலெக்டரிடம் அறிவுறுத்தினார். குன்னுார் கூடுதல் கலெக்டர் சங்கீதா, நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி, தாசில்தார் ஜவஹர் உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.
09-Dec-2024