உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தடுப்பு சுவர் அமைக்காத ஊராட்சி மண்சரிவால் பாதிப்பு

தடுப்பு சுவர் அமைக்காத ஊராட்சி மண்சரிவால் பாதிப்பு

குன்னுார்; குன்னுார் எடப்பள்ளி இந்திரா நகரில் தடுப்பு சுவர் அமைத்து கொடுக்காததால் மண்சரிவு ஏற்பட்டது.குன்னுார் எடப்பள்ளி ஊராட்சி இந்திராநகர் பகுதியில் நேற்று முன்தினம் முதல் நள்ளிரவு கொட்டி தீர்த்த கன மழையில் மண் சரிவு ஏற்பட்டது. அதில், நஜ்மா பானு என்பவரின் குடியிருப்பு அருகே மண்சரிவு ஏற்பட்டது. தாழ்வாக உள்ள சங்கர் என்பவரின் வீட்டில் மண் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது.'இங்கு தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும்,' என, ஏற்கனவே பல முறை எடப்பள்ளி ஊராட்சிக்கு புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தடுப்பு சுவர் அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ