உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  அஞ்சலகங்களில் பார்சல் சேவை: காலை முதல் இரவு வரை நீடிப்பு

 அஞ்சலகங்களில் பார்சல் சேவை: காலை முதல் இரவு வரை நீடிப்பு

ஊட்டி: நீலகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நீலகிரி கோட்டத்தில், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வணிகர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், வாடிக்கையாளர்களின் கோரிக்கை படி பொதுமக்களின் சேவையை கருத்தில் கொண்டு, கடிதம், பார்சல் புக்கிங் சேவை செயல்படுகிறது. இது சேவை தலைமை அஞ்சலகம் மற்றும் துணை அஞ்சலங்களிலும், காலை, 8:00 மணி முதல் இரவு,8:00 மணிவரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. துணை அஞ்சலகங்களில் காலை, 8:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை, புக்கிங் சேவை நீடிக்கப்படட்டுள்ளது. வெளிநாடுகளுக்கான ஸ்பீட் போஸ்ட் சேவையில், 25 கிலோ, பதிவுத்தபால், பார்சல் சேவையில், 20 கிலோ மற்றும் ஐ.டி.எப்.எஸ்., சோபயல், 5 கிலோ வரையிலும் குறைந்த கட்டணத்தில் அனுப்பும் வசதி உள்ளது. இது, ஏற்றுமதியாளர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. வாடிக்கையாளர்கள் அனுப்பும் அனைத்து தபால் களையும் 'ட்ராக்' செய்யும் வசதி உள்ளது. பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களுடைய பொருட்களை உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதை எளிமைப்படுத்தும் விதமாக, பார்சல் பேக்கிங் பொருட்களை குறைந்த விலையில் தலைமை அஞ்சலகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை