தேசிய பழங்குடியின ஆணைய உறுப்பினரிடம் படுகர் அமைப்பினர் மனு
ஊட்டி; நீலகிரிக்கு வந்துள்ள, தேசிய பழங்குடியின ஆணைய உறுப்பினர் ஜதோத்து ஹுசைன் நாயக் நேற்று, ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், அரசு துறை அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க வந்தார்.அப்போது, நீலகிரி மாவட்ட பூர்வகுடி படுகர் அமைப்பினர் அவரிடம், பல்வேறு ஆவணங்களுடன் வழங்கிய மனுவில், 'நீலகிரியில் படுகர் இன மக்கள் ஆண்டாண்டு காலமாக வசித்து வருகின்றனர். எஸ்.டி., பட்டியலில் சேர்க்க கடந்த பல ஆண்டுகளாக பல கட்டபோராட்டங்கள்; சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதுவரை எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதற்கான பணியை மாநில அரசு துரிதப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கூறப்பட்டுள்ளது.நிகழ்வில், நிர்வாகிகள், கணேஷ் ராமலிங்கம், குள்ளன், ஐயாரு உட்பட பலர் பங்கேற்றனர்.