மேலும் செய்திகள்
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வந்தது அழைப்பு
20-Mar-2025
ஊட்டி ; நல வாரியத்தில் ஓய்வூதியம் பெறும் கட்டுமான தொழிலாளர்கள் ஆயுள் சான்றினை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொழிலாளர் உதவி ஆணையர் லெனின் அறிக்கை: நீலகிரியில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் தமிழ்நாடு கட்டுமானம், உடலுழைப்பு உள்ளிட்ட இதர தொழிலாளர், 2024--25 ம் ஆண்டிற்கான ஆயுள் சான்றினை ஏப்., 1ம் தேதி முதல் ஏப்., 30ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்களது வங்கி கணக்கு புத்தகம் நகல், குடும்ப அட்டை நகல், புகைப்பட நகல், ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களை, tnuwwb.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்து பயன்பெற வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
20-Mar-2025