இந்திரா நகரில் அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் அவதி
குன்னுார் குன்னுார் பேரட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட இந்திரா நகரில், அடிப்படை வசதிகள் செய்து தராமல் உள்ளதால், மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.குன்னுார் பேரட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. குடிநீர், தெரு விளக்கு, நடைபாதை, தடுப்பு சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் உள்ளதாலும், குப்பைகளும் அகற்றாததாலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, மக்கள், மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளனர்.