உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாதசாரிகளை பதம் பார்க்கும் நடை பாதை: அரசு பணம் விரயத்தால் மக்கள் அதிருப்தி

பாதசாரிகளை பதம் பார்க்கும் நடை பாதை: அரசு பணம் விரயத்தால் மக்கள் அதிருப்தி

பந்தலூர்: பந்தலூர் பஜாரில், 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நடைப்பாதை உடைந்து காணப்படுவதால் அரசு பணம் விரயமாகியுள்ளது. பந்தலூர் பஜாரின் குறுகலான சாலையின், இரண்டு பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளது. பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதை வசதி இல்லாமல், சாலையில் நடந்து செல்லும் நிலையால் விபத்து அபாயம் ஏற்பட்டது. இதனை தவிர்க்க சாலையை ஒட்டி ஆக்கிரப்புகளை அகற்றி, நடைபாதை ஏற்படுத்தி தர பொதுமக்கள் வலியுறுத்தினார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை ஓரத்தில், நெல்லியாளம் நகராட்சி சார்பில், 40 லட்ச ரூபாய் செலவில் நடைபாதை அமைக்கப்பட்டது. நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்து உள்ளதால், நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. நடைபாதையின் பல இடங்களிலும், பாதசாரிகளை பதம் பார்க்கும் வகையில், உடைந்து காணப்படுகிறது. 40 லட்ச ரூபாய் செலவில் நடைபாதை அமைத்து, மக்கள் முழுமையாக பயன்படுத்த முடியாமல் உடைந்து காணப்படுவதால், நடைபாதையின் நிலை குறித்து தெரியாமல் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பாதசாரிகள் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். மழை காலங்களில் மழைநீர் வழிந்தோட கால்வாய் வசதியும் கிடையாது. 40 லட்ச ரூபாய் செலவு செய்து பெயரளவிற்கு, நடைபாதை அமைத்தது., குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் வாயிலாக நடை பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.என, பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை