உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் நடைப்பாதையை மீட்டு தர மக்கள் கோரிக்கை

ஊட்டியில் நடைப்பாதையை மீட்டு தர மக்கள் கோரிக்கை

ஊட்டி ; ஊட்டி நகராட்சி, 7 வது வார்டு கவுன்சிலர் விசாலாட்சி தலைமையில் பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:நகராட்சி, 7 வார்டுக்கு உட்பட்ட ரோஸ் மவுண்டன் அருள் நகரில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன.இங்குள்ள நகராட்சி நடைபாதையை கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நடைபாதையை ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் தடுத்து, தடுப்பு சுவர் கட்டி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.மேலும், நடைப்பாதை தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில் அவர்கள் தடுப்பு சுவர் கட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளனர். இப்பகுதியை நேரில் ஆய்வு செய்து நடைப்பாதையை மீட்டு பொது மக்கள் பயன்படுத்த ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை