உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / எக்ஸ்பிரஸ் கட்டணத்தை தடுக்க ஐகோர்ட் உத்தரவு செயல்படுத்த கலெக்டருக்கு மனு

எக்ஸ்பிரஸ் கட்டணத்தை தடுக்க ஐகோர்ட் உத்தரவு செயல்படுத்த கலெக்டருக்கு மனு

குன்னுார்;'நீலகிரி அரசு பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூலிக்க ஐகோர்ட் தடை விதித்தும் வசூல் செய்து வருவதற்கு, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரியில் இருந்து, உள்ளூர் மற்றும் சமவெளி பகுதிகளுக்கு, 349 வழித்தடங்களில் இயங்கும் பஸ்கள், சாதாரண கட்டணத்தில் மட்டுமே, இயக்க வட்டார போக்குவரத்து அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. அதில், '25 கி.மீ.,க்கு ஒரு 'ஸ்டேஜ்' கொண்ட, 80 கி.மீ.,க்கான அரசு ஆணை, நீலகிரிக்கு பொருந்தாது,' என, கூறப்பட்ட நிலையில், அரசு போக்குவரத்து கழகம் தன்னிச்சையாக 'எக்ஸ்பிரஸ்' கட்டணத்தை மக்களிடம் வசூலிக்கிறது.இது தொடர்பாக, கடந்த, 2019ம் ஆண்டு ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடுத்து, கடந்த மாத இறுதியில் தீர்ப்பு வழங்கப்பட்டது.லஞ்சம் இல்லா நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறியதாவது:நீலகிரியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆணைக்கு ஏற்ப அனைத்து பஸ்களிலும் சாதாரண கட்டணம் வசூலிக்க வேண்டும். 'எக்ஸ்பிரஸ் பஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்படவில்லை,' என, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்தும், உத்தரவை மீறி, அரசு போக்குவரத்து கழகம், மக்களை ஏமாற்றி, 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூலித்து வருகிறது.இது தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் நுகர்வோர் சங்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. தொடர்ந்து, 'சட்ட விரோதமாக எக்ஸ்பிரஸ் கட்டண வசூலில் ஈடுபட்டு வருவதை அறிந்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்,' கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும், போக்குவரத்து கழக நிர்வாகம் அதனை பின்பற்றவில்லை. நீலகிரி மாவட்ட கலெக்டர் மாவட்ட கலெக்டர் இது குறித்து விசாரணை செய்து, ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ