உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாற்று திறனாளிகள் கூட்டம்

மாற்று திறனாளிகள் கூட்டம்

ஊட்டி : அகில இந்திய மாற்று திறனாளிகள் மக்கள் நல வாழ்வு சங்க சிறப்புகூட்டம் ஊட்டியில் நடந்தது. சங்க தலைவராக மாணிக்கம், துணைத் தலைவராக ராஜன், செயலாளராக சுப்ரமணியன், பொருளாளராக லீலாவதி, செயற்குழு உறுப்பினர்களாக ஜெயக்குமார், பெல்லிக்ஸ், சென்ராய் பெருமாள், கிருஷ்ணன், ஜெயசுதா, ஆலோசகராக மதிமாறன் தேர்வு செய்யப்பட்டனர். மாற்று திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவது; கடநாடு, கக்குச்சி, கெரடாமட்டம், பகுதிகளில் உள்ள தொகுப்பு வீடுகளை மாற்று திறனாளிகளுக்கு வழங்குவது; மினி பஸ் ஸ்டாண்ட் அருகே நிழற்குடை, கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர கோருவது; இரு வாரத்துக்கு ஒரு முறை மாற்று திறனாளிகளுக்கு மனுநீதிநாள் நடத்த கோருவது; மாற்று திறனாளிகள் துவங்கும் சுய உதவி குழுக்களுக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெல்லிக்ஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை