காட்டேரியில் குழாய் உடைப்பு; வீணாகி வரும் குடிநீரால் சிரமம்
குன்னுார்; குன்னுார் நகராட்சி காட்டேரி சாலையில், குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவதை சீரமைக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட காட்டேரி பகுதியில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்கு குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு காண, சில இடங்களில் மட்டும் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக புதிய குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், ஆங்காங்கே குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பல இடங்களிலும் உடைப்பு ஏற்பட்ட குழாய்களில், ரப்பர் சுற்றப்பட்டுள்ளது. எனினும், அழுத்தம் காரணமாக குடிநீர் வீணாகி வருவதற்கு நகராட்சி தீர்வு காணாமல் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் இதனை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.