உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஒரே நாளில் 400 மரக் கன்றுகள் நட்டு அசத்தல்

ஒரே நாளில் 400 மரக் கன்றுகள் நட்டு அசத்தல்

அன்னூர் : காட்டம்பட்டி ஊராட்சியில் உள்ள குளத்தில், ஒரே நாளில், 400 மரக்கன்றுகள் நடப்பட்டன.காட்டம்பட்டி ஊராட்சியில், 140 ஏக்கர் பரப்பளவு உள்ள குன்னத்தூர் குளம் உள்ளது. இந்த குளத்தில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, தன்னார்வலர்களின் ஒத்துழைப்போடு, குளம் சீரமைத்தல் மற்றும் அடர்வனம் அமைத்தல் பணிகளை செய்து வருகிறது.குப்பேபாளையத்தில் உள்ள ஜெஹோரன்ஸ்கி நிறுவனத்தின், நிதி உதவியுடன், ஒரே நாளில், 400 மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. மா, சப்போட்டா, கடுக்காய், நெல்லி, பவளமல்லி, அத்தி, அகத்தி, உள்பட 40 வகையைச் சேர்ந்த 400 மரக்கன்றுகள் நடப்பட்டன.இப்பணியை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சத்யபிரியா பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா, ஊராட்சி தலைவர்கள் காயத்ரி, கீதா, ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், அமைப்பின் செயலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.'ஒவ்வொரு வாரமும் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விடுதல், பராமரித்து களை எடுத்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் தொடர்ந்து செய்யப்படும்,' என தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை