உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாசில்லா தீபாவளி கொண்டாட உறுதிமொழி

மாசில்லா தீபாவளி கொண்டாட உறுதிமொழி

பந்தலுார்: பந்தலுார் அருகே தேவாலா அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில், மாசில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேவாலா அரசு பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், ஆசிரியர் விஷ்ணு தாஸ் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் தலைமை வகித்து, மாசில்லா தீபாவளி கொண்டாடுவது மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பது குறித்து விளக்கம் அளித்ததுடன், மாணவர்களுடன், உறுதிமொழியும் எடுத்து கொண்டனர். தொடர்ந்து, நகராட்சி தலைவர் சிவகாமி மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தர்ஷினி தேவி, கீதா, யசோதா, கண்மணி, கோகிலா மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் பங்கேற்றனர். ஆசிரியர் கவுசல்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை