உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலூரில் மறியல் போராட்டம்: 43 பேரை கைது செய்த போலீசார்

பந்தலூரில் மறியல் போராட்டம்: 43 பேரை கைது செய்த போலீசார்

பந்தலுார்:தொழிற்சங்கங்கள் சார்பில், பந்தலுாரில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யூ., நிர்வாகி ராஜன் தலைமை வகித்தார். நிர்வாகி ரமேஷ் முன்னிலை வகித்தார். அதில், 'விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; திருத்திய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; அங்கன்வாடி, ஆஷா, மக்களை தேடி மருத்துவத் திட்டம் ஊழியர்களை நிரந்தர படுத்தி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். பசுந்த இலைக்கு போதிய விலை வழங்கவும், புதிய வேலைவாய்ப்பு திட்டங்களை உருவாக்கவும் வேண்டும், என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. 27 பெண்கள் உள்ளிட்ட 43 பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை