உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுார் அருகே பெண் கொலை; போலீஸ் விசாரணை

கூடலுார் அருகே பெண் கொலை; போலீஸ் விசாரணை

கூடலுார்; கூடலுார் அருகே, பெண் கொலை தொடர்பாக ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் காசிம்வயல் பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர் கிளாடிஸ்,31. இவர், வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக, நேற்று இரவு கூடலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார், உடலை மீட்டு பரிசோதனைக்காக கூடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இந்த கொலை தொடர்பாக ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணைக்கு பின் கொலைக்கான காரணம் தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ