உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

ஊட்டி: -ஊட்டியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் அக்., 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதன்படி நேற்று நாடு முழுவதும் பணியின் போது உயிர் நீத்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஊட்டியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., நிஷா ஆகியோர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். போலீசார், 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். அப்போது துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக போலீசார் தங்களது சீருடைகள் மற்றும் கைகளில் கருப்பு பட்டை அணிந்து இருந்தனர். டி.எஸ்.பி.,க்கள் நவீன் குமார், ராஜ்குமார், சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ