உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  சாலையில் நிறுத்திய போலீஸ் வாகனம் குன்னுாரில் போக்குவரத்து நெரிசல்

 சாலையில் நிறுத்திய போலீஸ் வாகனம் குன்னுாரில் போக்குவரத்து நெரிசல்

குன்னுார்: குன்னுார் லெவல் கிராசிங் பாலம் பகுதிகளில் போலீசாரின் வாகனங்கள், நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்னுாரில் போதுமான பார்க்கிங் வசதி இல்லாத நிலையில், சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 'லெவல் கிராசிங்' பாலம், ஆட்டோ ஸ்டாண்ட் எதிரே, போலீசாரின் கார் நிறுத்தப்பட்டது. இதனால், இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன. போக்குவரத்து போலீசார் அங்கு வந்து நெரிசலுக்கு தீர்வு கண்டனர். பஸ் ஸ்டாண்ட் பாலத்திலும் அரசு டவுன் பஸ்களை நிறுத்துவதாலும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டுமென வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி