உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 19ம் தேதி மின் தடை பகுதிகள் அறிவிப்பு

19ம் தேதி மின் தடை பகுதிகள் அறிவிப்பு

ஊட்டி; நீலகிரி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஊட்டி மற்றும் மலர்பெட்டு துணை மின் நிலையங்களில், 19ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.இதனால், நாளை மறுநாள் காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை ஊட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஊட்டி நகரம், பிங்கர்போஸ்ட், காந்தள், தமிழகம், ஹில்பங்க், கோடப்பமந்து, முள்ளிக்கொரை, சேரிங்கிராஸ், பாம்பேகேசில், கேத்தி, நொண்டிேமடு, தலையாட்டிமந்து, இத்தலார், எம்.பாலாடா ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.மேலும், மலர்பெட்டு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இந்திராநகர், மேல்தாவணி, மல்லிக்கொரை, மேலூர், கக்கேரி, கோழிப்பண்ணை, ஒடக்காடு, உல்லத்தி, சக்திநகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை