உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளி வளாகத்தில் சேட்டை செய்த குரங்குகளுக்கு சிறை

பள்ளி வளாகத்தில் சேட்டை செய்த குரங்குகளுக்கு சிறை

பந்தலுார்; பந்தலுார் அருகே சேரம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், குரங்கு சேட்டையால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அங்குள்ள சத்துணவு கூடம் மற்றும் பள்ளி மேல் கூரைகளில் குரங்குகள் சென்று பல்வேறு பிரச்னைகளை செய்து வருகின்றன. மேலும், பள்ளிக்கு வரும் மாணவர்களை அடிக்கடி குரங்குகள் துரத்தி செல்கின்றன. இதை தொடர்ந்து, சேட்டை செய்யும் குரங்குகளை, பிடிக்க வேண்டி பள்ளி நிர்வாகம் சார்பில் சேரம்பாடி வனச்சரகர் அய்யனாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் கூண்டு வைக்கப்பட்டு பிடிபட்ட, 23 குரங்குகளும், கீழாடுகாணி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டன. இதனால், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ