உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலை வசதி கேட்டு பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்

சாலை வசதி கேட்டு பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்

கூடலுார்; கூடலுார் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட, 18 வது வார்டு பகுதிகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கூடலுார் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட செலுக்காடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், சேதமடைந்த சாலை சீரமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கான நடவடிக்கை இல்லாத நிலையில், அதிருப்தி அடைந்த மக்கள், கவுன்சிலர் சாய்பிரியா தலைமையில் நேற்று, தேவர்சோலை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். செயல் அலுவலர் பிரதீப்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், 'சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் செய்து தரப்படும்,' என, தெரிவித்தார். அதனை ஏற்க மறுத்த மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் முன்னிலையில், நடந்த பேச்சுவார்த்தையில், ஒரு மாதத்துக்குள் சாலை சீரமைப்பு பணிகளை துவங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்று மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை