மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
3 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
4 hour(s) ago
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் பக்தர்களுக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா பத்திரிகையை பா.ஜ.,வினர் வழங்கினர்.அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இம்மாதம், 22ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக இந்தியா முழுவதும் உள்ள மக்களை அழைக்க, பா.ஜ., தலைமை முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., பொதுச் செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் நிர்வாகிகள் மகேந்திரன், பாலு உள்ளிட்டோர் நாயக்கன்பாளையம் சாய்பாபா கோவிலில் இருந்த பக்தர்களுக்கு ராமர் கோவில் அட்சதை, அழைப்பிதழ், ராமர் படம் ஆகியவற்றை அளித்து கும்பாபிஷேகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.மேலும், கூடலுார் நகராட்சிக்கு உட்பட்ட, 27 வார்டுகளில் வசிக்கும் பொது மக்களுக்கும், பா.ஜ., சார்பில் அழைப்பிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
3 hour(s) ago
4 hour(s) ago