ராணிக்கெட் வைரஸ் தாக்குதல்; கோழிகளுக்கு தடுப்பூசி முகாம்
ஊட்டி,; 'நீலகிரி மாவட்டத்தில் கோழிகளை 'ராணிக்கெட் ' வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்ற தடுப்பூசி போட வேண்டும்,'என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில், கால்நடை பராமரிப்பு துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்கள் மூலம், அனைத்து கிராமங்களிலும், 14ம் தேதி வரை, இரு வார கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடக்கிறது.இதில், மூன்று மாத கோழி குஞ்சு முதல், அனைத்து பருவக் கோழிகளுக்கும் குறைந்தபட்சம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும், அதிகபட்சமாக, 6 மாதத்திற்குள்ளும் வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும்.தடுப்பூசி போடாத பட்சத்தில், 'ராணிக்கெட்' வைரஸ் தாக்கி வெள்ளை கழிச்சல் நோயால் கோழிகள் பாதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் கால்நடை பராமரிப்பு துறை மூலம் நடைபெறும் இம்முகாமில், தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.