உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  மாவனல்லாவில் ஆக்கிரமிப்பு நிலத்தில் புனரமைப்பு பணி

 மாவனல்லாவில் ஆக்கிரமிப்பு நிலத்தில் புனரமைப்பு பணி

ஊட்டி: ஊட்டி அருகே மாவனல்லா கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதாக கூறி, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி அருகே உள்ள மாவனல்லா கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியினர் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 7 சென்ட் நிலத்தில் 40 ஆண்டுகளாக துணை ஆரம்ப சுகாதார மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையத்தின் கட்டடம் மிகவும் மோசமானதால் அந்த மையத்தில் சுகாதார துறை ஊழியர்கள் யாரும் தாங்குவதில்லை. துணை ஆரம்ப சுகாதார மையத்தின் பின்புறம் இருந்த, 3 சென்ட் காலி இடத்தை அந்தப் பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் ஆக்கிரமித்து புதிதாக வீடு கட்டி உள்ளதாக கூறப்படுகிறது. வீடு கட்டும் போதே கிராம மக்கள் எதிப்பு தெவித்தும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்று தெரிகிறது. பொதுமக்கள் எதிர்ப்பு தற்போது, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பழைய துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பணி தொடங்கும்போதே ஆக்கிரமிப்பு இடத்தை மீட்ட பிறகு வாகன நிறுத்தும் வசதியுடன் கட்டுமான பணிகளை செய்ய கிராம மக்கள் ஒப்பந்ததாரரிடம் கூறினர். பின், கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆக்கிர மிப்பை அகற்ற கோரி மனு அளித்தனர். ஆனாலும் ஆக்கிரமிப்பு அகற்றாமல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஆத்திரமடைந்த பழங்குடியின மக்கள் ஒன்று திரண்டு வந்து நேற்று கட்டுமான பணிகளை நிறுத்துமாறு முற்றுகையிட்டனர். பொதுமக்கள் கூறுகையில், 'ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு புதிதாக பணிகளை தொடங்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் இதுவரை அரசு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை, ஒப்பந்ததாரர் எங்களை மிரட்டுகிறார். அதிகாரிகளும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதற்கு சரியான தீர்வு காணாவிட்டால் அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை