ராணுவ பயிற்சி கல்லுாரி வழங்கிய மறு வடிவமைப்பு ஸ்கூட்டர்கள்
குன்னுார், ; வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரி சார்பில், மாற்று திறன் கொண்ட, சிவில் பாதுகாப்பு ஊழியர்களுக்கு, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன.குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில் உள்நாடு மட்டுமின்றி நட்பு நாடுகளின் முப்படை இளம் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, 80வது பயிற்சி நிறைவு பெற உள்ளது. இந்நிலையில், நிறுவன தினத்தை முன்னிட்டு நடந்து வரும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, எலும்பியல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், மறுவடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன.இவற்றை, ராணுவ பயிற்சி கல்லுாரி கமாண்டன்ட் லெப் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், 5 சிவில் பாதுகாப்பு ஊழியர்களுக்கு, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஸ்கூட்டர்களை வழங்சி பேசுகையில், ''இந்த முயற்சி இயக்கத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பு சமூகத்திற்குள் நீடித்த கவனிப்பு, மரியாதை மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றின் நெறிமுறைகளையும் பிரதிபலிக்கும் வகையில் வழங்கப்பட்டது,'' என்றார்.