உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு உதவித்தொகை

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு உதவித்தொகை

பந்தலுார் : கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது. வயநாடு சூரல்மலை பகுதியில் கடந்த ஜூலை, 30ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில், சிக்கி நீலகிரியை சேர்ந்த, 4 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு பந்தலுார் வளர்ச்சி குழு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மூன்று குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. நேற்று சேரம்பாடி மன்னாத்திவயல் பகுதியை சேர்ந்த சிகாபுதீன் என்பவரின் மனைவி செல்மா மற்றும் குடும்பத்தினரிடம் வளர்ச்சி குழு சார்பில், 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், குழுவின் ஒருங்கிணைப்பாளர் தீபக்ராம், உறுப்பினர்கள் அனுாப், சனுஜா, மகேந்திரன், ஜனனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை