உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானை வழித்தடத்தில் களை செடிகள் அகற்றம்

யானை வழித்தடத்தில் களை செடிகள் அகற்றம்

பந்தலுார்; நெலாக்கோட்டையில், யானைகள் வழித்தடத்தில் களைச்செடிகள் வெட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பந்தலுார் அருகே பிதர்காடு வனசரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நெலாக்கோட்டை அமைந்துள்ளது.கூடலுாரில் இருந்து வயநாடு செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பகுதியில் இரண்டு பக்கங்களிலும் புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இங்கு களைச் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், யானைகள் வந்து செல்லும்போது தெரியாது சூழல் ஏற்பட்டு பாதிப்புகள் உருவாகிறது. இதனை தடுக்கும் வகையில், நெலாக்கோட்டை பஜார் மற்றும் குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில், வனச்சரகர் ரவி மேற்பார்வையில், 2 ஏக்கர் பரப்பளவில் லெண்டானா உள்ளிட்ட களை செடிகள் வெட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை