உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கழிவுநீர் தொட்டியில் விழுந்த காட்டெருமை மீட்பு

கழிவுநீர் தொட்டியில் விழுந்த காட்டெருமை மீட்பு

குன்னுார்;குன்னுார் பாய்ஸ் கம்பெனி பகுதியில் நேற்று மதியம், 1:00 மணியளவில் கழிவுநீர் தொட்டிக்குள் காட்டெருமை விழுந்து வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தது. தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார், கட்டபெட்டு வனச்சரகர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர், இணைந்து கழிவுநீர் தொட்டியை உடைத்து மாலை, 6:00 மணியளவில் காட்டெருமையை மீட்டனர். சிறிது நேரம் ஓய்வெடுத்த காட்டெருமை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ