உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோத்தகிரி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த மன்ற கூட்டத்தில் தீர்மானம்

கோத்தகிரி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த மன்ற கூட்டத்தில் தீர்மானம்

கோத்தகிரி : கோத்தகிரி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி பேரூராட்சி, சிறப்பு நிலை அந்தஸ்தை பெற்றுள்ளது. பேரூராட்சியின் வருவாய் மற்றும் மக்கள் தொகை அடிப்படையில், நகராட்சியாக தரம் உயர வாய்ப்பு இருந்து வருகிறது.கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக நகராட்சியாக தரம் உயர்த்தும் கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில், சட்ட சபையில் மாநிலத்தில் தகுதி வாய்ந்த சில நகராட்சிகளை, மாநகராட்சிகளாகவும்; பேரூராட்சிகளை, நகராட்சிகளாகவும் தரம் உயர்த்த அறிவிப்பு வெளியானது. அந்த பட்டியலில், கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சியில், அவசர மன்ற கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி தலைமை வகித்தார். துணை தலைவர் உமாநாத் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் நடராஜ் முன்னிலையில், மன்ற கவுன்சிலர்கள் பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், மாநில அரசின் அறிவிப்புக்கு ஏற்ப, கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து, விவாதம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, அனைத்து கவுன்சிலர்களின் ஆதரவுடன், ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை