மேலும் செய்திகள்
அப்பாவுவா, கொக்கா!:
22-Sep-2024
குன்னுார் : 'சோகத்தொரை கிராமத்தில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்,' என, தீர்மானிக்கப்பட்டது.குன்னுார் அருகே, சோகத்தொரை கிராம மக்கள் கடந்த, 49 ஆண்டுகளாக காந்திஜெயந்தி விழாவை கொண்டாடி வருகின்றனர். நடப்பாண்டின் விழாவில், காந்தி படத்திற்கு மலர் துாவி, ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர் தலைவர் பசுபதி தேசிய கொடி ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். பேராசிரியர் டாக்டர் செந்தில் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, காந்தியின் அகிம்சை, தியாகம், ஒழுக்கத்தின் அவசியம் பற்றி பேசினார். 10ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். யோகா மற்றும் விளையாட்டில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 'கிராமத்தில், காந்தி சிலை அமைப்பது; பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது; யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் இயற்கை விவசாயத்தை மக்களிடம் சேர்த்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவது,' போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊர் பிரமுகர் பத்மநாதன் வரவேற்றார். வேல்முருகன் நன்றி கூறினார்.
22-Sep-2024