உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வருவாய் துறை அதிகாரிகள் மாநில எல்லையில் சோதனை; பணம் பெற்று இ--பாஸ் பதிவிறக்கம் செய்து தருவதாக புகார்

வருவாய் துறை அதிகாரிகள் மாநில எல்லையில் சோதனை; பணம் பெற்று இ--பாஸ் பதிவிறக்கம் செய்து தருவதாக புகார்

கூடலுார்; தமிழக - கேரளா எல்லையில், கேரளா இளைஞர்கள்சிலர் சுற்றுலா பயணிகளிடம் பணம் பெற்று இ--பாஸ் பதிவிறக்கம் செய்து தருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஆய்வு நடந்தது.ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு கூட்டம்அதிகரித்து வருதால் நெரிசலை கட்டுப்படுத்தவும், வாகன எண்ணிக்கையை கணக்கெடுக்கவும், நீலகிரிக்கு வரும் வெளி மாவட்ட மற்றும் மாநில வாகனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவுபடி, இ--பாஸ் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கூடலுார் வழியாக நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு, இ--பாஸ் இருந்தால் மட்டுமே, பணியில் உள்ள ஊழியர்கள் அனுமதித்து வருகின்றனர்.இந்நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக, கடந்து மூன்று நாட்களாக நாடுகாணி வழியாக கேரளா சுற்றுலா பயணிகள்வருகை அதிகரித்துள்ளது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இ--பாஸ் எடுத்து வருவதில்லை. சோதனை பணியில் உள்ள ஊழியர்கள் அவர்களுக்கு இ--பாஸ் எடுக்க உதவி வருகின்றனர்.

பணம் பெற்று பதிவிறக்கம்

இந்நிலையில், 'கேரளாவை சேர்ந்த சில இளைஞர்கள், தமிழக -கேரளா எல்லையில், சுற்றுலா பயணிகளிடம் பணம் பெற்று கொண்டு இ--பாஸ் பதிவிறக்கம் செய்து தருகின்றனர்,' என, புகார் எழுந்தது. தொடர்ந்து, கூடலூர் வருவாய் ஆய்வாளர் ராம்குமார், தமிழக -கேரளா எல்லையான கீழ்நாடுகாணி வரை சென்று ஆய்வு செய்தார். ஆய்வில், கேரளா வழிகடவு அருகே, கேரளா இளைஞர்கள் சிலர் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. கேரளா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.தொடர்ந்து, சுற்றுலா பயணிகளுக்கு இ--பாஸ் பதிவிறக்கம் செய்யும் முறைகள் குறித்து சோதனை பணியில் இருந்த ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.அதிகாரிகள் கூறுகையில், 'இ--பாஸ் சோதனையின் போது, பாஸ் எடுக்காமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு, இ--பாஸ் பதிவிறக்கம் செய்ய, ஊழியர்கள் இலவசமாக உதவி வருகின்றனர். இந்நிலையில், கேரள பகுதியில் சில இளைஞர்கள், பணம் பெற்று இ--பாஸ் பதிவிறக்கம் செய்து வருவது குறித்து கேரள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
டிச 27, 2024 07:41

இபாஸ் பதிவிறக்கம் கூட செய்யத் தெரியாத தத்திகள் கார்ல வந்துருவாங்க. 100, 200 விட்டெறிஞ்சா இபாஸ் கிடைச்சுருது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை