உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வீட்டு கூரையில் விழுந்த மரம் வருவாய் துறை நிவாரண உதவி

வீட்டு கூரையில் விழுந்த மரம் வருவாய் துறை நிவாரண உதவி

பந்தலுார்; பந்தலுார் அருகே வீட்டு கூரையில் மரம் விழுந்து பாதிக்கப்பட்டதால், வாருவாய் துறையினர் நிவாரண உதவி வழங்கினர். பந்தலுார் அருகே சந்தனசிறா பகுதியில் பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று காலை காற்றுடன் மழை பெய்த நிலையில், லட்சுமி என்பவரின் வீட்டின் அருகே இருந்த மரம் ஒன்று, அடியோடு முறிந்து வீட்டு கூரை மீது விழுந்து சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக வீட்டிற்குள் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதியில் வருவாய் துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வருவாய் துறை மூலம், 8,000 ரூபாய் நிவாரண தொகை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை