உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தடுப்பு சுவர் பணியில் தொய்வு; மழையால் பாதிப்பு ஏற்படும் அபாயம்

தடுப்பு சுவர் பணியில் தொய்வு; மழையால் பாதிப்பு ஏற்படும் அபாயம்

குன்னுார் : குன்னுார் கிருஷ்ணாபுரம் பகுதியில் மழையால் இடிந்த ஆற்றோர தடுப்பு சுவர் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.குன்னுாரில், கடந்த, 3ம் தேதி இரவு பெய்த கனமழையில் கிருஷ்ணாபுரம் ஆற்றோர தடுப்பு சுவருடன் சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. ஆய்வு மேற்கொண்ட ஆளும் கட்சியினர் சாலையின் ஒரு பகுதியில் மூட்டைகள் அடுக்கி பணிகளை துவக்கினர். உடனடியாக நகராட்சி சார்பில் ஒப்பந்ததாரருக்கு பணிகள் கொடுத்து தடுப்பு சுவர் பணி துவங்கியது. தொடர்ந்து, பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், மழை தீவிரமடையும் போது சாலை முழுமையாக துண்டிக்கும் அபாயம் உள்ளது. இதேபோல, சில மாதங்களுக்கு முன் பள்ளம் ஏற்பட்டு குழியான ஆற்றோர பகுதியை ஆய்வு செய்து போட்டோ எடுத்து சென்ற ஆளும் கட்சியினர் இதுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை