உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளியை தரம் உயர்த்தக் கோரி சாலை மறியல்

பள்ளியை தரம் உயர்த்தக் கோரி சாலை மறியல்

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் சந்தக்கடை அருகே மேட்டுப்பாளையம் நகராட்சியின் வள்ளுவர் நகரவை தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இப்பள்ளியை தரம் உயர்த்த கோரியும், அதன் மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப விளையாட்டு மைதானம் போன்றவற்றை அமைத்து தர வேண்டியும், பள்ளி மேலாண்மை குழு மற்றும் பொதுமக்கள் சார்பில் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டன. மேலும், பள்ளி அருகே உள்ள அரசுக்கு சொந்தமான காலி இடத்தில் மாணவர்களுக்கு தேவையான அறைகள் மற்றும் விளையாட்டு மைதானம் அமைத்து தர வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், அந்த காலி இடத்தில் நகராட்சி சார்பில் சந்தை கடை அமைக்க தற்போது கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பெரிய பள்ளிவாசல் அருகே இருந்து ஊர்வலமாக எஸ்.டி.பி.ஐ., அ.தி.மு.க., மற்றும் ம.ஜ.க., கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ