உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கலை சங்கமம் விழா குழுவினருக்கு தலா ரூ.30 ஆயிரம்

கலை சங்கமம் விழா குழுவினருக்கு தலா ரூ.30 ஆயிரம்

ஊட்டி;ஊட்டியில், இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலை சங்கமம் விழா நடந்தது.விழாவில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று, 4 குழுவினருக்கு தலா, 30 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி பேசியதாவது: மாநிலத்தில், இயல், இசை மற்றும் நாடக மன்றம், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டு, 3 கோடி ரூபாய் நிதி உயர்த்தப்பட்டது.கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு பொற்கிழி தொகை, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. கலை பரிமாற்றத்தில், தமிழக கலை குழுக்களை வேறு மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு, 50 லட்சம் ரூபாய் நிதி உயர்த்தப்பட்டது.கிராமிய கலைஞர்களுக்கு இசை கருவிகள், ஆடை, அணிகலன்கள் மற்றும் கலை பொருட்கள் வாங்க, 10 ஆயிரம் ரூபாய் நிதி உயர்த்தப்பட்டு, ஆண்டுதோறும் 500 கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. 'ஒவ்வொரு கலை பிரிவுக்கும், 50 கலைஞர்கள்,' என, 2,500 கலைஞர்கள் பங்குப்பெற்று கலை நிகழ்ச்சி நடத்துவது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 35 மாவட்டங்களில், கிராம கலை நிகழ்ச்சிகள் கலைச்சங்கமம் விழாவாக நடத்தப்படுகிறது. நலிந்த கலைஞர்கள், மரணம் அடைந்த கலைஞர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட ஊராட்சி தலைவர் பொந்தோஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ