மேலும் செய்திகள்
திருவொற்றியூரில் 260 பேர் ரத்த தானம்
14-Jul-2025
பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலா பகுதியில், கூடலுார் அரசு மருத்துவமனை ரத்த வங்கி; தேவாலா நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்; நேச குரல் ரத்த தான சேவை மையம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், டாக்டர் அப்துல் கலாம் பொது சேவை மையம் ஆகியவை இணைந்து ரத்ததான முகாமை நடத்தின. அப்துல் கலாம் பொது சேவை மையத் தலைவர் சிவசுந்தரம் தலைமை வகித்தார். வாலிபர் சங்க நிர்வாகிகள் ரவிக்குமார், அசைன், நேசக்குரல் நிர்வாகிகள் செல்வநாயகம், ஷாஜி முன்னிலை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். டாக்டர் சவுந்தர்யலட்சுமி தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்த பரிசோதனை செய்தனர்.நிகழ்ச்சியில், 15 பேரிடம் ரத்தம் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது. ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி நன்றி தெரிவிக்கப்பபட்டது.
14-Jul-2025