மேலும் செய்திகள்
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
6 hour(s) ago
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
6 hour(s) ago
ரூ.1.25 கோடியில்புதிய நுாலக கட்டடம்
6 hour(s) ago
சூலுார் : இயற்கை விவசாயம் மற்றும் உரம் தயாரிப்பை அறிந்து கொள்ள, அரசு பள்ளி மாணவ, மாணவியர் களப்பயணம் சென்றனர்.'என் சிறந்த கனவு திட்டத்தின் கீழ், அறம் பவுண்டேஷன் டிரஸ்ட் மற்றும் இசட் எப் பவர் நிறுவனம் சார்பில், காங்கயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு மாணவர்கள் களப்பயணம் சென்றனர். பொள்ளாச்சி சேத்துமடையில் உள்ள கோதே என்ற இயற்கை வழி வேளாண் பண்ணைக்கு சென்ற அவர்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் எவ்வாறு, இயற்கை வழி வேளாண்மை செய்யப்படுகிறது என, பார்வையிட்டனர். மேலும், இயற்கையான முறையில் உரங்கள் தயாரிக்கும் முறைகளை நேரடியாக பார்த்து அறிந்து கொண்டனர். தொடர்ந்து, கயிறு இழுத்தல், மாட்டு வண்டி ஓட்டுதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்று மகிழ்ந்தனர். பொதுத்தேர்வு எழுதப்போகும் நிலையில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு அமைதியை தரும் வகையில் இந்த களப்பயணம் அமைந்ததாக மாணவர்கள் கூறினர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago