/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பச்சிளம் குழந்தைகளுடன் வலம் வரும் சீசன்; யாசகர்கள் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை தேவை
பச்சிளம் குழந்தைகளுடன் வலம் வரும் சீசன்; யாசகர்கள் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை தேவை
ஊட்டி; ஊட்டியில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதேபோல, வெளி இடங்களில் இருந்து யாசகர்கள் அதிகம் பேர் ஊட்டியில் தங்கி சுற்றுலா பயணிகளிடம் உதவி கேட்டு வருகின்றனர்.நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சுற்றுலா தல நுழைவாயில்கள்,முக்கிய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் யாசகர்கள் பலர் முற்றுகையிடுகின்றனர். அதில், பெண்கள் கடும் வெயிலில் பச்சிளக்குழந்தைகளை இடுப்பில் கட்டி யாசகம் எடுத்து வருகின்றனர். உள்ளூர் மக்கள் கூறுகையில்,'மாவட்ட சமூக நலத்துறையினர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் நகரில் ஆய்வு மேற்கொண்டு யாசகம் எடுப்பவர்களை ஊட்டியில் உள்ள ஆதரவற்றோர் முகாமில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.