உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோவில் பந்தலுக்கு தீ வைப்பு

கோவில் பந்தலுக்கு தீ வைப்பு

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் மங்களக்கரை புதூரில் வீரசென்னியம்மன் கோவில் உள்ளது. அருகில் உள்ள கெண்டேபாளையம், மருதூர், ராமகவுண்டன் புதூர், கீரணத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர். கோவில் முன் தென்னை ஓலையில் பந்தல் அமைத்து, அதன் மேல் தகர சீட் அமைக்கப்பட்டுள்ளது.இதனிடையே நேற்று அதிகாலை மர்ம நபர்கள் இந்த பந்தலுக்கு தீ வைத்தனர். இதில் பந்தல் ஓலைகள் எரிந்து, சேதமடைந்தது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பந்தலுக்கு தீ வைத்தது யார் என்று காரமடை போலீசார் விசாரிக்கின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி