உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

ஊட்டி:ஊட்டி அருகே, 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயின்டர் கைது செய்யப்பட்டார்.ஊட்டி ரூரல் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் தம்பதியினரில் கணவர் பெயின்டராகவும், மனைவி கூலி வேலைக்கும் சென்று வருகிறார். பெயின்டர் வேலை என்பதால் கணவர் அடிக்கடி வெளியூர் செல்கிறார்.இந்நிலையில், தம்பதியினரின் இரண்டாவது பெண் குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உறவினர்கள் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிறுமி சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைகளில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, டாக்டர்கள் சமூக நலத்துறைக்கும், ஊட்டி ஊரக போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துமாரியம்மாள் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை செய்ததில், பெயின்டரான வாலிபர் ஒருவர், மாணவிக்கு சாக்லேட் தருவதாக அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி, ஊட்டி கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ