உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேயிலை குடோன்கள் கோவைக்கு மாற்றம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி

தேயிலை குடோன்கள் கோவைக்கு மாற்றம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி

குன்னுார் : குன்னுாரில் இருந்து கோவைக்கு தேயிலை குடோன்களை மாற்றம் செய்வதால், சுமை துாக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் தேயிலை தொழில் பல்வேறு காரணங்களால் பாதிப்படைந்து வருகிறது. பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காதது; தேயிலை ஏலத்தில் ஒரு கிலோ தேயிலை துாள், 100- ரூபாய்க்கும் குறைவாகவே ஏலம் போவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிப்படைந்துள்ளது.தேயிலை ஏலத்தில் வாரம் சராசரி, 15 கோடி ரூபாய் வரை மொத்த வருமானம் கிடைத்து வரும் நிலையில், குன்னுாரில் உள்ள தேயிலை ஏல மையம் கோவைக்கு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. தேயிலை வாரிய நடவடிக்கையால் தற்காலிக தீர்வாக மீண்டும் குன்னுாரில் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், தற்போது சில குடோன்களை கோவைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், குன்னுாருக்கு வருகை தந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசனை நேரில் சந்தித்த சுமை துாக்கும் தொழிலாளர்கள், இதற்கு தீர்வு காண கோரி மனுவை வழங்கினர்.சுமை துாக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், 'கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, குன்னுாரில் இருந்த சில குடோன்கள் கோவை உள்ளிட்ட சமவெளி பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டதால், பல தொழிலாளர்களின் குடும்பம் பாதிக்கப்பட்டது. கடந்த, 45 ஆண்டுகளாக தேயிலை மூட்டைகளை துாக்கும் தொழிலை நம்பி இருந்த, 500 தொழிலாளர்கள் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. தற்போது மீதமுள்ள தேயிலை குடோன்களை மீண்டும் சமவெளி பகுதிக்கு கொண்டு சென்று வருவதால், 1500 பேர் பாதிக்கப்படுவர். எனவே இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ